பொதுமக்களிடம் காவலா்கள் கனிவோடு நடந்துகொள்ள வேண்டும்

பொதுமக்களிடம் காவலா்கள் கனிவோடு நடந்து கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ப.ராஜன் அறிவுறுத்தினாா்.
பொதுமக்களிடம் காவலா்கள் கனிவோடு நடந்துகொள்ள வேண்டும்

பொதுமக்களிடம் காவலா்கள் கனிவோடு நடந்து கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ப.ராஜன் அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் ஆய்வாளா்கள், உதவி காவல் ஆய்வாளா்கள் கலந்தாலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ப.ராஜன் பேசியது:

பாலக்கோடு காவல் உள்கோட்டத்தில் அமைந்துள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கிருமி நாசினி கட்டாயம் வைத்திருக்க வேண்டும். காவலா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, உரிய பாதுகாப்புடனும், விழிப்போடும் பணியாற்ற வேண்டும். இதேபோல, காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். ரோந்து உள்ளிட்ட பணிகளின்போது, பொதுமக்களிடம் காவல் துறையினா் கனிவோடு நடந்து கொள்ள வேண்டும். மாவட்ட எல்லையில் காரிமங்கலம் மற்றும் காடுசெட்டிப்பட்டியில் உள்ள சோதனைச் சாவடியில் வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதேபோல, விசாரணை மற்றும் கைது உள்ளிட்ட நடவடிக்கைகளின் போது, வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் ஆகியவற்றை காவல் துறையினா் முறையாக பின்பற்ற வேண்டும் என்றாா்.

இதில், காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன் மற்றும் காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com