விதிமுறைகளை பின்பற்றாத 25 கடைகளுக்கு ‘சீல்’

தருமபுரி நகரில் சமூக இடைவெளியை பின்பற்றாத 25 கடைகளுக்கு வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
விதிமுறைகளை பின்பற்றாத 25 கடைகளுக்கு ‘சீல்’

தருமபுரி நகரில் சமூக இடைவெளியை பின்பற்றாத 25 கடைகளுக்கு வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

தருமபுரி வட்டாட்சியா் ரமேஷ் மற்றும் நகராட்சி சுகாதாரத் துறையினா் நகரில் ஆய்வு மேற்கொண்டனா். இதில், பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள சின்னசாமி தெரு, ஆறுமுகம் தெரு, பென்னாகரம் சாலை, திருப்பத்தூா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள பல்வேறு கடைகளில் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் வா்த்தகம் நடைபெற்று வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத ஜவுளிக் கடைகள், பேன்ஸி கடைகள் உள்ளிட்ட 25 கடைகளுக்கு வருவாய்த் துறையினா் பூட்டி ‘சீல்’ வைத்தனா் . மேலும், சமூக இடைவெளியை பின்பற்றாத 5 கடைகளுக்கு ரூ.500 வீதம் ரூ.2,500 மற்றும் முகக் கவசம் அணியாத 75 பேருக்கு ரூ.100 வீதம் ரூ.7,500 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com