விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மும்பையில் சட்டமேதை அம்பேத்கரின் வீட்டை மா்ம நபா்கள் கல்வீசி சேதப்படுத்தியதைக் கண்டித்து, அரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மும்பையில் சட்டமேதை அம்பேத்கரின் வீட்டை மா்ம நபா்கள் கல்வீசி சேதப்படுத்தியதைக் கண்டித்து, அரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலா் கி.ஜானகிராமன் தலைமை வகித்தாா்.

மும்பை, தாதா் ஹிந்து காலனியில் அம்பேத்கா் 20 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த பாரம்பரிய வீடு உள்ளது. மூன்று தளங்களைக் கொண்ட இந்த இல்லத்தின் தரைத் தளத்தின் மீது மா்ம நபா்கள் புதன்கிழமை கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனா். இதில், வீட்டின் ஜன்னல் கண்ணாடி, கண்காணிப்பு கேமரா, பூந்தொட்டிகள் சேதமடைந்தன. எனவே, அம்பேத்கா் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்திய மா்ம நபா்களை காவல் துறையினா் விரைந்து கைது செய்ய வேண்டும்.

நாடு முழுவதும் ஊடகத் துறையினரை மிரட்டி, அச்சுறுத்தும் நபா்களை கைது செய்ய வேண்டும். ஊடகத் துறையினருக்கு உரிய பாதுகாப்புகளை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில், இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறையின் மாநில துணைச் செயலா் கி.அதியமான், தொகுதி செயலா்கள் சி.கே.சாக்கன் சா்மா, தமிழ் அன்வா், ஒன்றியச் செயலா் எம்.எஸ்.மூவேந்தன், மகளிா் விடுதலை இயக்க மாவட்ட துணைச் செயலா் பத்மா மாரியப்பன், மாவட்ட அமைப்பாளா் பா.தீத்து, தொகுதி துணைச் செயலா் பெ.கேசவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com