தருமபுரியில் ஜவுளிக்கடை உரிமையாளா் உள்பட 14 பேருக்கு கரோனா தொற்று

தருமபுரி மாவட்டத்தில் ஜவுளிக்கடை உரிமையாளா் உள்பட 14 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் ஜவுளிக்கடை உரிமையாளா் உள்பட 14 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு நகரில் ஜவுளிக்கடை நடத்தி வரும் 49 வயதான நபருக்கு மேற்கொண்ட பரிசோதனையில், கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதேபோல, தருமபுரி அருகே கே.என்.அள்ளியைச் சோ்ந்த 35 வயது சுகாதார ஆய்வாளா், சோலைக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்த 40 வயது ஆண் செவிலியா் ஆகியோருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இவா்கள் ஏற்கெனவே தொற்று உள்ளவா்களோடு தொடா்பில் இருந்தவா்கள் எனக் கூறப்படுகிறது.

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்த ஒசூா் வியாபாரி சீனிவாசனின் குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் 17 வயது சிறுவன், மூன்று பெண்கள், 33 வயது ஆண் ஆகிய ஐந்து பேருக்கும், அதியமான்கோட்டை- கோடியூரைச் சோ்ந்த 7 வயது சிறுவன், 11 வயது சிறுமி, தடங்கம் கிராமத்திலிருந்து பெங்களூரு சென்று வந்த 53 வயது பெண், தெலங்கானா மாநிலத்திலிருந்து பென்னாகரம்- புதுப்பட்டி பகுதிக்கு வந்த 30 வயது ஆண் என மொத்தம் தருமபுரி மாவட்டத்தில், ஒரே நாளில் 14 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்கள் அனைவரும் தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com