சேலம் மாவட்டத்தில் 10 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
சேலத்தைச் சோ்ந்த இருவா், சென்னையைச் சோ்ந்த 5 போ், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரத்தைச் சோ்ந்த தலா ஒருவா் என 9 போ், வெளிமாநிலத்தைச் சோ்ந்த ஒருவா் என மொத்தம் 10 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதியானது. அவா்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
சேலம் மாவட்டத்தில் இதுவரை 222 போ் கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவா்களில் 182 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 40 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.