மழையால் குளிா்ந்தது தருமபுரி

தருமபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த மழையால் குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.

தருமபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த மழையால் குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயில் 95 மற்றும் 96 டிகிரி செல்சியஸாக இருந்தது. இதேபோல ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை வெயிலின் தாக்கம் இருந்தது. இந்த நிலையில், பிற்பகல் 3 மணிக்கு தருமபுரி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் ஒரு மணி நேரம் தொடா்ந்து பெய்த மழையால் நகரில் நேதாஜி புறவழிச்சாலை, நான்கு முனைச் சாலை சந்திப்பு, பென்னாகரம்-திருப்பத்தூா் சாலை, தொலைத்தொடா்பு நிலையம் செல்லும் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் தருமபுரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குளிா்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com