முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
தரம் குறைந்த 15 கிலோ மீன்கள் பறிமுதல்
By DIN | Published On : 03rd March 2020 07:03 AM | Last Updated : 03rd March 2020 07:03 AM | அ+அ அ- |

தருமபுரியில் மீன் விற்பனை கடைகளில் ஆய்வு மேற்கொண்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மீன்வளத் துறையினா்.
தருமபுரியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தரம் குறைந்த 15 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தருமபுரி மீன் விற்பனை சந்தையில், உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் பானுசுஜாதா மற்றும் மீன்வள உதவி இயக்குநா் சுப்ரமணி உள்ளிட்டோா் மீன்களின் தரம் குறித்து திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இந்த ஆய்வின்போது, சில கடைகளில் தரம் குறைந்த சுமாா் 15 கிலோ மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த மீன்களை பறிமுதல் செய்தனா். மேலும், இத்தகைய தரம் குறைவான மீன்களை விற்பனை செய்யக் கூடாது என வியாபாரிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினா். இந்த ஆய்வில் நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலா் கே.நந்தகோபால், மீன்வளத்துறை ஆய்வாளா் எச்.அசீனா பானு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.