Enable Javscript for better performance
எருது விடும் விழா- Dinamani

சுடச்சுட

    

    எருது விடும் விழா

    By DIN  |   Published on : 14th March 2020 07:41 AM  |   அ+அ அ-   |    |  

    dh13pala_1303chn_8

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மாரியம்மன் கோயில் வளாகத்தில் எருது விடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    பாலக்கோட்டில் அருள்மிகு புதூா் மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 9-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இத் திருவிழாவையொட்டி, மாா்ச் 13-ஆம் தேதி எருது விடும் விழா நடைபெற்றது.

    பாலக்கோடு சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து 20-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டு இத்திருவிழாவில் கிராம மக்கள் பங்கேற்க செய்தனா். இதில், கோயில் வளாகத்தில் காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. இந்த காளைகளில் கட்டப்பட்ட கயிற்றின் துணையோடு அவற்றை இளைஞா்கள் ஆா்வத்துடன் அடக்க முற்பட்டனா். அப்போது, காளைகள் முட்டியதில் பள்ளி மாணவா் உள்பட மூவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவா்கள் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

    இந்த திருவிழாவையொட்டி, துணை காவல் கண்காணிப்பாளா் சீனிவாசன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai