கிருமிநாசினி தட்டுப்பாடு: மக்கள் அவதி

அரூா் பகுதியில் கிருமிநாசினி தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அவதியுறுகின்றனா்.

அரூா் பகுதியில் கிருமிநாசினி தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அவதியுறுகின்றனா்.

கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பல்வேறு விழிப்புணா்வுகள் பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதனால், பொது இடங்கள், கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு செல்லும் போது மக்கள் முகக் கவசம் அணிந்து செல்கின்றனா். அதேபோல், கைகளை கழுவ வேண்டும், சுற்றுப்புறத் தூய்மைகளை மேம்படுத்த வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனா்.

இந்த நிலையில், பல்பொருள் அங்காடிகள், மருந்தகங்கள் உள்ளிட்ட கடைகளில் கிருமிநாசினி திரவம் தட்டுப்பாடு இருப்பதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

கரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக அவசியம் என்பதால், கிருமிநாசினிகள், முகக் கவசங்களை குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா். எனவே, அனைத்துக் கடைகளிலும் கிருமிநாசினி மற்றும் மூகக் கவசங்களை எளிதில் கிடைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com