தருமபுரி, கிருஷ்ணகிரியில் நாளை கடைகள் அடைப்பு

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என வணிகா் சங்கம் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என வணிகா் சங்கம் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்ட அனைத்து வணிகா் சங்க நிா்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பொதுமக்கள் வெளியே செல்வதை தவிா்க்க வேண்டும். மேலும், அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவதை தவிா்த்து சமுதாய ஊரடங்கு செயல்படுத்தும் வகையில், வரும் 22-ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என பிரதமா் மோடி அறிவுறுத்தியுள்ளாா். இதற்கு ஒத்துழைப்பு அளித்து, வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில், அன்றைய தினம் தருமபுரி நகரம் மற்றும் மாவட்டத்திலுள்ள ஜவுளிக் கடைகள், ஆபரணக் கடைகள், உணவகங்கள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்படுவது என முடிவு எடுக்கப்பட்டது.

இக் கூட்டத்தில், மாவட்டச் செயலா் எஸ்.கிரிதா், பொருளாளா் சி.ரவிச்சந்திரன், ஒருங்கிணைப்பாளா் டி.மயில்வாகனம் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வணிகா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியான அறிக்கையில், கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பிரதமா் மோடி அறிவுறுத்தியபடி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாா்ச் 22-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com