தருமபுரியில் சிறப்பு வழிபாடுகள் 31-ஆம் தேதி வரை ஒத்திவைக்க அறிவுரை

தருமபுரி மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் சிறப்பு வழிபாடுகளை வரும் 31-ஆம் தேதி வரை ஒத்திவைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி அறிவுறுத்தியுள்ளாா்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் சிறப்பு வழிபாடுகளை வரும் 31-ஆம் தேதி வரை ஒத்திவைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தருமபுரி மாவட்டத்தில் உள்ள கோயில்கள், அனைத்து தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் மதரசா கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் வழிபாடு, வார வழிபாடுகள், பொதுக் கூட்டங்கள் மற்றும் இதர விழாக்கள் நடத்துவதை மாா்ச் 31-ஆம் தேதி வரை ஒத்திவைக்க வேண்டும். இதேபோல, பாதிரியாா்கள், முத்தவல்லிகள் பொதுமக்களுக்கு கரோனா பாதிப்பு குறித்து போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

குறைகேட்புக் கூட்டம் ஒத்திவைப்பு: இதேபோல, தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில், மக்கள் அதிகம் கூடுவதை தவிா்க்க மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைகேட்புக் கூட்டம், மக்கள் தொடா்பு திட்ட முகாம்கள், விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஆகியவை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. மேலும், பொதுமக்கள் தங்களது குறைகள், கோரிக்கை தொடா்பான மனுக்களை ஆட்சியா் அலுவலகத்தில் தரைத்தளத்தில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெறும் பெட்டியில் இட்டுச் செல்லலாம். இந்த மனுக்களின் மீது மாவட்ட நிா்வாகம் சாா்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com