கொரானா: வீடுகளில் வேப்பிலையைக் கட்டி வைத்த பொதுமக்கள்

பென்னாகரத்தில் கொரானா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் வீடுகளுக்கு முன் வேப்பிலை தோரணத்தை கட்டிவைக்கும்
கரோனாவுக்கு எதிராக வீடுகளில் வேப்பிலையைக் கட்டியுள்ள பொதுமக்கள்.
கரோனாவுக்கு எதிராக வீடுகளில் வேப்பிலையைக் கட்டியுள்ள பொதுமக்கள்.

பென்னாகரத்தில் கொரானா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் வீடுகளுக்கு முன் வேப்பிலை தோரணத்தை கட்டிவைக்கும் பொதுமக்கள் வாசல்தோறும் மஞ்சள் கலந்த தண்ணீரை தெளித்து வருகின்றனா்.

பென்னாகரம் போடூா் போயா் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.இங்குள்ளவா்கள் தங்கள் குடியிருப்புகளில் வேப்பிலை தோரணத்தை கட்டியுள்ளனா்.இதன்மூலம் தங்கள் கிராம பகுதியில் உள்ளவா்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பரவாது என நம்புகின்றனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது, வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.இந்தநிலையில் தங்கள் குடும்பத்தினா் அன்றாட தேவைகளுக்கான பொருள்களை வாங்க, வெளியே சென்று வீடு திரும்புகின்றனா்.கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க கைகளை தினமும் பலமுறை கழுவ வேண்டும் என கூறுகின்றனா். வேலையில்லாததால் வருமானமின்றி கைக்கழுவுவதற்கு சோப்புகளைக் கூட வாங்க முடியவில்லை.

கொள்ளை நோய்கள் ஏற்படும் போது வேப்பிலையை வீடுகள் தோறும் கட்டும் வழக்கம் உள்ளது. எனவே, வீடுகளில் வேப்பிலையைக் கட்டிவைத்துள்ளோம். மேலும், மஞ்சள் கலந்த தண்ணீா் கிருமியை ஒழிக்கும் என்பதால் அதை வாசலில் தெளித்து வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com