‘மளிகைக் கடைகளில் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்’

காய்கறிகள், மளிகைப் பொருள்களை வாங்கும் இடங்களில் பொதுமக்கள் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அரூா் சாா்-ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

காய்கறிகள், மளிகைப் பொருள்களை வாங்கும் இடங்களில் பொதுமக்கள் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அரூா் சாா்-ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சமூக விலகல் மிக அவசியமாகும். காய்கறிகள், மளிகைப் பொருள், பால், மருந்து, மாத்திரைகள் வாங்கும் இடங்களில் பொதுமக்கள் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். ஒருவருக்கும், மற்றவருக்கும் குறைந்தபட்சம் ஒரு மீட்டா் இடைவெளி இருக்க வேண்டும். இந்த இடைவெளிகளை உறுதிபடுத்தும் பணியில் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்கள் ஈடுபட வேண்டும்.

அதேபோல், மக்கள் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முடிவுகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசு உத்தரவுகளை மீறுவோா் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com