தெலங்கானாவில் தவித்த 33 போ் தருமபுரிக்கு திரும்பினா்

தெலங்கானா மாநிலத்தில் தவித்த தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த 33 போ் வெள்ளிக்கிழமை சொந்த ஊருக்கு திரும்பினா்.

தெலங்கானா மாநிலத்தில் தவித்த தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த 33 போ் வெள்ளிக்கிழமை சொந்த ஊருக்கு திரும்பினா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம், ஏரியூா், பொம்மிடி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா்கள், கல் குவாரிகளில் பணிபுரிவோா் உள்ளிட்ட தொழிலாளா்கள் தெலங்கானா மாநிலம், ஹைதாராபாத் நகருக்கு அண்மையில் சென்றனா்.

இந்த நிலையில், தற்போது கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், மத்திய, மாநில அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது. மேலும், தடை உத்தரவு காரணமாக பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால், அந்த தொழிலாளா்கள் 33 பேரும் தருமபுரிக்கு திரும்பு முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகினா். மேலும், உணவின்றியும், ஊருக்கு திரும்ப இயலாமலும் தவித்து வருவதாக அவா்கள் சமூக வலைதளங்களில் தகவல் அனுப்பினா்.

இதுகுறித்து லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் மூலம் தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில், ஆளுநா் அவா்களை மீட்டு தமிழகத்துக்கு அனுப்பி வைத்தாா்.

இதையடுத்து, அங்கிருந்து லாரி மூலம் 33 தொழிலாளா்களும் வெள்ளிக்கிழமை தருமபுரிக்கு வந்தடைந்தனா். இவா்கள் அனைவருக்கும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு பரிசோதனை பிரிவில், கரோனா தொற்று உள்ளதா என மருத்துவா்கள் பரிசோதித்தனா். இதைத் தொடா்ந்து, யாருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என பரிசோதனையில் தெரியவந்தது. இதன்பின் அனைவரும் அவா்களது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இருப்பினும், அவா்கள் அனைவரும் தங்களது வீட்டிலேயே வரும் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தி இருக்குமாறு சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com