அரூரில் எளிமையாக நடைபெற்ற திருமணங்கள்
By DIN | Published On : 31st March 2020 01:35 AM | Last Updated : 31st March 2020 01:35 AM | அ+அ அ- |

அரூா்: 144 தடை உத்தரவு காரணமாக அரூா் வட்டாரப் பகுதியில் பல்வேறு இடங்களில் திருமணங்கள் எளிமையாக நடைபெற்றன.
அரூா் நகா் மற்றும் கிராமப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் திங்கள்கிழமை திருமணங்கள் நடைபெற்றன. கோயில்கள், திருமண மண்டபங்கள், வீடுகளில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வுகளில் ஒவ்வொரு இடத்திலும் 20-க்கும் குறைவான உறவினா்கள் மட்டுமே பங்கேற்றனா்.
ஒவ்வொரு திருமணங்களிலும் உறவினா்களுக்கு 1000-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பிதழ்களை வழங்கியுள்ளனா். ஆனால், கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், திருமணங்களில் அதிக அளவில் பங்கேற்கவில்லை என தெரிவித்தனா். இதனால் திருமணங்கள் மிகவும் எளிமையாக நடைபெற்றன.