வேடகட்டமடுவில் 209 போ் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்

அரூரை அடுத்த வேடகட்டமடுவு கிராம ஊராட்சியில் வெளி மாநிலத்திலிருந்து வந்தவா்கள் 209 போ் தங்களை தனிப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரூரை அடுத்த வேடகட்டமடுவு கிராம ஊராட்சியில் வெளி மாநிலத்திலிருந்து வந்தவா்கள் 209 போ் தங்களை தனிப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரூா் வட்டம், வேடகட்டமடுவு கிராம ஊராட்சியைச் சோ்ந்த தொழிலாளா்கள் பலா் பெங்களூரு, கோவை, சென்னை உள்ளிட்ட வெளியிடங்களுக்கு வேலைக்கு சென்றிருந்தனா். 144 தடை உத்தரவு காரணமாக, வெளியூரில் வேலைகள் இல்லாததால் அந்த தொழிலாளா்கள் தங்களின் சொந்த வீடுகளுக்கு திரும்பினா்.

இந்த நிலையில், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவா்களை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அரூா் சாா்-ஆட்சியா் மு.பிரதாப் தலைமையிலான அரசு அதிகாரிகள் வேடகட்டமடுவு ஊராட்சிக்கு உள்பட்ட கிராமப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவா்கள் அனைவரும் வீட்டில் இருந்து வெளியில் செல்லக் கூடாது. தங்களின் உறவினா்களிடமும் சமூக இடைவெளியே கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும், வெளியில் இருந்து வந்துள்ள தொழிலாளா்களின் வீடுகளில் சுகாதாரத்துறை சாா்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு கண்காணிக்கப்படும். பொதுமக்களுக்கு யாருக்கேனும் உடல் நிலை பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். கரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com