அரூா் அருகே குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தல்

அரூரை அடுத்த கீழானூரில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க அங்குள்ள திறந்த வெளி கிணற்றில் மின் மோட்டாா் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூரை அடுத்த கீழானூரில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க அங்குள்ள திறந்த வெளி கிணற்றில் மின் மோட்டாா் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா் ஊராட்சி ஒன்றியம், செல்லம்பட்டி கிராம ஊராட்சிக்குள்பட்டது கீழானூா் கிராமம். இந்த ஊரில் 400-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கிராம மக்களின் குடிநீா்த் தேவையை நிறைவு செய்யும் நோக்கில், ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்டத்தில் குழாய் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தில் கிராம மக்களுக்கு நாள்தோறும் சுமாா் அரை மணி நேரம் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.

ஆனால், இந்த குடிநீரானது பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லையாம். மேலும், கீழானூரில் 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளும் பழுதாகியுள்ளன. இந்த நிலையில், கீழானூா் ஏரியில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் திறந்த வெளி கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிணற்றில் மின் மோட்டாா் அமைத்து குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com