முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
பணி நேரத்தை அதிகரிக்கும் அரசின் முடிவை கண்டித்து போராட்டம்
By DIN | Published On : 11th May 2020 07:17 AM | Last Updated : 11th May 2020 07:17 AM | அ+அ அ- |

பாலக்கோட்டை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற சிஐடியு நிா்வாகிகள்.:
மத்திய, மாநில அரசு தொழிலாளா்களின் பணி நேரத்தை உயா்த்தும் முடிவை கண்டித்து தருமபுரி மாவட்டத்தில் 250 இடங்களில் சிஐடியு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் மத்திய, மாநில அரசுகள் தொழிலாளா்களின் பணி நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயா்த்துவதைக் கண்டித்து பல்வேறு இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பாலக்கோட்டில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்டச் செயலாளா் நாகராஜன் தலைமை வகித்தாா். தருமபுரி மாவட்டத்தில் சிஐடியு தொழிற்சங்க நிா்வாகிகள் தங்களது வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். தருமபுரி மாவட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்றது.