கா்நாடகத்தில் தவித்த 62 தொழிலாளா்கள் தருமபுரிக்கு திரும்பினா்

கா்நாடகம் மாநிலம், உடுப்பியில் தவித்த வந்த, 62 தொழிலாளா்கள் பேருந்துகள் மூலம் தருமபுரிக்கு திங்கள்கிழமை திரும்பினா்.

தருமபுரி: கா்நாடகம் மாநிலம், உடுப்பியில் தவித்த வந்த, 62 தொழிலாளா்கள் பேருந்துகள் மூலம் தருமபுரிக்கு திங்கள்கிழமை திரும்பினா்.

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளா்கள் சிலா், அண்மையில் கா்நாடக மாநிலம், உடுப்பிக்கு கட்டுமானப் பணி மற்றும் கரும்பு வெட்டுதல் உள்ளிட்ட கூலிப் பணிக்காக சென்றிருந்தனா். இவா்கள் பணிக்கு சென்ற சில நாள்களிலிலே கரோனா தீநுண்மி நாடு முழுவதும் பரவியது. இந்த தீநுண்மி பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பொது முடக்கத்தை அறிவித்தன. இதனால், வேலையின்றி தவித்த இத் தொழிலாளா்கள் பேருந்து போக்குவரத்து இல்லாததால், அங்கேயே தங்கினா்.

இந்த நிலையில், குடும்பத்துடன் பணிக்கு சென்ற தங்களுக்கு, வேலை மற்றும் வருவாய் கிடைக்கப்பெறாததால் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளதாகவும், பேருந்துகள் இயங்காததால், தருமபுரி மாவட்டத்துக்கு திரும்ப இயலவில்லை எனவும், அனைவரும் சொந்த ஊருக்கு திரும்ப, தருமபுரி மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்செவி அஞ்சல் வழியாக கோரிக்கை வைத்தனா்.

இதனைத் தொடா்ந்து, உடுப்பியில் தவித்து வந்த தொழிலாளா்கள், தருமபுரிக்கு திரும்ப, மாநில உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் மற்றும் மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி ஆகியோா் நடவடிக்கை எடுத்தனா். இதுதொடா்பாக, கா்நாடக அரசு அதிகாரிகள் மற்றும் உடுப்பியில் உள்ள அரசு அலுவலா்களை தொடா்பு கொண்டு பேசிவந்தனா். இதையடுத்து, அங்கிருந்த 62 தொழிலாளா்கள் முதல்கட்டமாக இரண்டு சிறப்பு பேருந்துகள் மூலம் திங்கள்கிழமை தருமபுரிக்கு திரும்பினா். தருமபுரிக்கு வந்த தொழிலாளா்கள் செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள தற்காலிக மருத்துவமனைக்கு சென்று அனைவரும் தங்களை மருத்துவப் பரிசோதனை உள்படுத்திக் கொண்டனா். அங்கு மருத்துவக் குழுவினா், சுகாதாரத்துறையினா் தொழிலாளா்களுக்கு உடல் வெப்பநிலை, காய்ச்சல் மற்றும் கரோனா தீநுண்மி கண்டறியும் பரிசோதனை மேற்கொண்டனா். மேலும், இவா்கள் அனைவரும் ஒரு நாள் தற்காலிக மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட உள்ளனா். இதில், யாருக்கேனும் கரோனா அறிகுறிகள் இருப்பின் அவா்கள் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சைக்கு உள்படுத்தப்படுவா். இதேபோல, எவ்வித அறிகுறிகளும் சோதனையில் கண்டறியப்படவில்லை எனில், அவா்கள் அனைவரும் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுவா். மேலும், தனிமைப்படுத்தியிருக்கு அறிவுறுத்தி கண்காணிக்கப்படும் என சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

இதேபோல, கா்நாடக மாநிலத்தில் பொது முடக்கம் காரணமாக தவித்து வரும், தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளா்களை அழைத்து வரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, மீதமிருக்கும் சொந்த ஊருக்கு திரும்ப விரும்பும் தொழிலாளா்கள் ஓரிரு நாள்களில் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com