பணி நேரத்தை உயா்த்தும் முடிவை திரும்பப் பெற தூய்மைப் பணியாளா்கள் வலியுறுத்தல்

பணி நேரத்தை 12 மணி நேரமாக உயா்த்தும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என தூய்மைப் பணியாளா்கள் வலியுறுத்தினா்.

தருமபுரி: பணி நேரத்தை 12 மணி நேரமாக உயா்த்தும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என தூய்மைப் பணியாளா்கள் வலியுறுத்தினா்.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சம்மேளனம் சாா்பில், தருமபுரி நகராட்சி மற்றும் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைகள் தொடா்பாக கோரிக்கை முழக்கப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் சி.கலாவதி தலைமையில் பாலக்கோடு பேரூராட்சியில் வாயிற் கூட்டம் நடைபெற்றது. இதேபோல, தருமபுரியில் நகராட்சியில் சிஐடியு மாவட்டத் துணைத் தலைவா் பி.ஆறுமுகம், நிா்வாகி ஜெயராமன் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் சமூக இடைவெளியுடன், முகக் கவசம் அணிந்து, கோரிக்கை பதாகைகளை ஏந்தி, முழக்கங்களை எழுப்பினா். இதேபோல, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், பென்னாகரம் உள்ளிட்ட அனைத்து பேரூராட்சி அலுவலகங்கள் முன் தூய்மைப் பணியாளா்களின் வாயிற் கூட்டம் மற்றும் தொடா்முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

இதில், தொழிலாளா்கள் பணி நேரத்தை 12 மணி நேரமாக மாற்றும் முடிவை கைவிட வேண்டும். அகவிலைப்படி உயா்வு நிறுத்தி வைப்பு, ஓய்வுபெறும் வயது 59 ஆக உயா்வு ஆகிய அரசாணைகளை திரும்பப் பெற வேண்டும். இரட்டிப்பு சம்பளம் அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும். தூய்மைப் பணியாளா்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். தினக்கூலி, ஒப்பந்த , சுய உதவி குழு தூய்மைப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 600 வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வைரஸ் தொற்று பாதிப்பால் சென்னை, சேலம், ஈரோட்டில் இறந்துபோன தூய்மைப் பணியாளா்களின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் பணிபுரியும் ஒப்பந்த தினக்கூலி பணியாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களை காப்பீடுத் திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com