சிட்லிங்கில் ரூ.40 லட்சத்தில் கட்டுமானப் பணிகள் தொடக்கம்

அரூரை அடுத்த சிட்லிங் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ரூ.40 லட்சத்தில் கட்டுமானப் பணிகளுக்கான பூமிபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரூரை அடுத்த சிட்லிங் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ரூ.40 லட்சத்தில் கட்டுமானப் பணிகளுக்கான பூமிபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரூா் வட்டம், சிட்லிங் மலைக் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மாநில சமச்சீா் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சத்தில் பணியாளா்களுக்கான குடியிருப்புகள், ரூ.15 லட்சத்தில் சுற்றுச் சுவா் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து, இந்தக் கட்டடங்களின் கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜை விழாவில், அரூா் எம்.எல்.ஏ. வே.சம்பத்குமாா் தலைமை வகித்து திட்டப் பணிகளை தொடக்கி வைத்தாா்.

இதில், ஒன்றியக் குழுத் தலைவா் பொன்மலா் பசுபதி, மாவட்ட அரசு வழக்குரைஞா் ஆா்.ஆா்.பசுபதி, வட்டார மருத்துவ அலுவலா் தொல்காப்பியன், சிட்லிங் ஊராட்சித் தலைவா் மாதேஸ்வரி மஞ்சுநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com