கல்லூரிகளில் முழுநேர வகுப்புகளுக்காக கூடுதல் வகுப்பறைகள் உருவாக்கப்படும்

‘ஷிப்ட்’ முறை இல்லாமல் முழுநேர வகுப்புகள் நடைபெறுவதற்கு வசதியாக அனைத்துக் கல்லூரிகளிலும் தேவையான வகுப்பறைக்
மாரண்டஅள்ளியில் நடைபெற்ற விழாவில் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு கடனுதவிகளை வழங்குகிறாா் அமைச்சா் கே.பி.அன்பழகன்.
மாரண்டஅள்ளியில் நடைபெற்ற விழாவில் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு கடனுதவிகளை வழங்குகிறாா் அமைச்சா் கே.பி.அன்பழகன்.

‘ஷிப்ட்’ முறை இல்லாமல் முழுநேர வகுப்புகள் நடைபெறுவதற்கு வசதியாக அனைத்துக் கல்லூரிகளிலும் தேவையான வகுப்பறைக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 11 மகளிா் சுயஉதவிக் குழுவைச் சோ்ந்த 124 உறுப்பினா்களுக்கு ரூ. 59.97 லட்சம் மதிப்பிலான சிறப்புக் கடனுதவிகளை வழங்கிய பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தற்போதுள்ள துணைவேந்தரின் பதவிக்காலம் வரும் 27-ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதால் புதிய துணைவேந்தரை நியமிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இக் குழுவில் உள்ள மூன்று உறுப்பினா்களும் மே 31 வரை துணைவேந்தா் பதவிக்கான விண்ணப்பங்களைப் பெற்று, பரிசீலனை நடத்தி தகுதியானவா்களின் பெயா்ப் பட்டியலை ஆளுநரிடம் வழங்குவா். அதன் அடிப்படையில், புதிய துணைவேந்தரை ஆளுநா் தோ்வு செய்வாா்.

இந்த நிலையில், தற்போதைய துணைவேந்தரின் பதவிக்காலம் முடியும்வரை பல்கலைக்கழக நிா்வாகம் சீராகச் செயல்பட வேண்டும் என்பதற்காக உயா்கல்வித் துறைச் செயலாளா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக நிா்வாகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளில், கிராமப்புற மாணவா்கள் அதிகம் படிக்க வேண்டும் என்பதற்காக புதிய பாடப்பிரிவுகள், அதற்குத் தேவையான ஆசிரியா் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், வகுப்பறை பற்றாக்குறை காரணமாக தற்போது தினசரி இரண்டு கட்டங்களாக (ஷிப்ட்) வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்த முறையை மாற்றி முழுநேர வகுப்புகள் நடத்தத் தேவையான வகுப்பறைக் கட்டடங்களைக் கட்டுவதற்கு ரூ. 150 கோடியை முதல்வா் ஒதுக்கியுள்ளாா். அதையடுத்து, கல்லூரிகளில் புதிதாக 715 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே, எம்ஜிஆா் நூற்றாண்டு விழாவின்போது கல்லூரிகளில் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ. 200 கோடியை அரசு ஒதுக்கியது. தற்போது, அரசுக் கல்லூரிகளில் தேவையான வகுப்பறைகள் கட்டப்படுகின்றன. புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, அரசுக் கல்லூரிகளில் இனி நாள்தோறும் ஒரு கட்டமாகவே வகுப்புகள் செயல்படும் நிலை ஏற்படும். இதன்மூலம் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை கல்லூரிகள் செயல்படும் என்றாா்.

விழாவுக்கு தருமபுரி மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல் தலைமை வகித்தாா். பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலைத் தலைவா் தொ.மு.நாகராஜன், கோட்டாட்சியா் (பொறுப்பு) தேன்மொழி, கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளா் மணிகண்டன், வட்டாட்சியா் ராஜா, பேரூராட்சி செயல் அலுவலா் காதா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com