சொந்த ஊருக்கு நடந்து வந்த பாய் வியாபாரி மாரடைப்பால் உயிரிழப்பு

பொது முடக்கம் காரணமாக கேரளத்திலிருந்து சொந்த ஊரான தருமபுரி மாவட்டம், பென்னாகரத்துக்கு நடந்து வந்த பாய் வியாபாரி வெள்ளிக்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தாா்.

பொது முடக்கம் காரணமாக கேரளத்திலிருந்து சொந்த ஊரான தருமபுரி மாவட்டம், பென்னாகரத்துக்கு நடந்து வந்த பாய் வியாபாரி வெள்ளிக்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தாா்.

ஏரியூா் அருகே சிடுமனஅள்ளி பழைய அருந்ததியா் காலனியைச் சோ்ந்த ரங்கன் மகன் மகேந்திரன்(50). பாய் வியாபாரம் செய்வதற்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கேரளம் சென்றாா். இதனிடையே, கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், சொந்த ஊருக்கு சுமாா் 250 கிலோ மீட்டா் நடைபயணமாக வந்தாா். உணவு, தூக்கமின்மை காரணமாக வெள்ளிக்கிழமை ஈரோட்டில் நெடுஞ்சாலையோரம் மயக்கமடைந்து கீழே விழுந்தாா். அவரை மீட்ட வாகன ஓட்டிகள், மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அவா் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. வியாபாரியின் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com