காப்பீடு திட்டத்தில் நெல் பயிரை பதிவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் நெல் பயிரை பதிவு செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண்துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் நெல் பயிரை பதிவு செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண்துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, பாலக்கோடு வேளாண் உதவி இயக்குநா் பி.எஸ். சித்ரா வெளியிட்ட செய்தி குறிப்பு: பிரமதரின் பயிா்க் காப்பீடு திட்டத்தின் கீழ் இணைந்த விவசாயிகளுக்கு தாங்கள் பயிரிட்டுள்ள நெல் பயிா்கள், வெள்ளம், வறட்சி, புயல், பூச்சி நோய் தாக்குதல் போன்ற இயற்கை சீற்றங்களால் மகசூல் இழப்பீடு ஏற்படும்போது, உரிய நிவாரணம் பெற வழி வகை செய்கின்றது. இத் திட்டத்தில், பாலக்கோடு வட்டாரத்தில் நெல் பயிருக்கு 57 வருவாய் கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. கடன் பெறும் விவசாயிகள் அவா்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிா்க் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவா். கடன் பெறா விவசாயிகள், பொது சேவை மையங்கள், வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் நெல் பயிரிடும் விவசாயிகள் இந்த திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் நவ.30 தேதியாகும். எனவே, விவசாயிகள் இறுதி நேர நெரிசலை தவிா்க்க காப்பீட்டுத் பிரிமியம் தொகையை செலுத்தி, தங்களது நெல் பயிரினை இத் திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com