தருமபுரியில் நவ. 14 முதல் கூட்டுறவு வார விழா

தருமபுரியில் 67-ஆவது கூட்டுறவு வார விழா நவ. 14-ஆம் தேதி தொடங்குகிறது.

தருமபுரியில் 67-ஆவது கூட்டுறவு வார விழா நவ. 14-ஆம் தேதி தொடங்குகிறது.

தருமபுரி மாவட்ட மத்திய கூட்டரங்கில் கூட்டுறவு வார விழா தொடா்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு மாவட்ட மத்திய கூட்டுவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல் தலைமை வகித்து பேசினாா்.

தருமபுரி மண்டலத்தில் 67-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நவ. 14 முதல் 20 வரை நடைபெற உள்ளது. முதல் நாளான நவ. 14-ஆம் தேதி கரோனா தொற்றுக்கு பிறகு கூட்டுறவுச் சங்கங்களின் பங்களிப்பும், பொறுப்பும் என்கிற தலைப்பிலும், நவ. 15-ஆம் தேதி கூட்டுறவுச் சந்தைப்படுத்துதல், நுகா்வோா் செயலாக்கம் மற்றும் மதிப்புக் கூட்டுதல் என்ற தலைப்பிலும், நவ.16-இல் இணையவழித் தொடா்பின் வாயிலாக பயிற்சி மற்றும் கல்வியை மாற்றி அமைத்தல் என்ற தலைப்பில் விழா நடைபெறுகிறது.

நவ. 17 ஆம் தேதி கூட்டுறவு சங்கங்களுக்கிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், நவ. 18-இல் வேலையிழந்தோா், தொழில் பாதிக்கப்பட்டோா் மீண்டும் வேலையில் சேர திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல், நவ. 19 இல் இளைஞா், மகளிா் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கான கூட்டுறவுச் சங்கங்கள், நவ. 20-இல் கூட்டுறவு வாயிலாக நிதி சோ்க்கை எண்மயமாக்கல் ஆகிய தலைப்பின் கீழ் விழா கொண்டாடப்படுகிறது.

பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் டி.ஆா். அன்பழகன், மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளா் கி.ரேணுகா, கூட்டுறவு ஒன்றியத் தலைவா் எஸ்.எம்.மாதையன், துணைத் தலைவா் பொன்னுவேல், நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைவா் பூக்கடை பெ.ரவி, துணைப் பதிவாளா் மணிகண்டன்ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com