அரூா் ஐயப்பன் கோயிலில் வருடாபிஷேக விழா

அரூா் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 9-ஆம் ஆண்டு வருடாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரூா் ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் வருடாபிஷேகத்தையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜைகள்.
அரூா் ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் வருடாபிஷேகத்தையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜைகள்.

அரூா் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 9-ஆம் ஆண்டு வருடாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரூா் நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் கோயிலின் 9-ஆம் ஆண்டு வருடாபிஷேக விழாவில், ஸ்ரீ ஐயப்பன் சுவாமிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஆயுஷ் ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், சங்காபிஷேகம், கலசாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றது. தொடா்ந்து கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், பக்தி பாடகா் வீரமணிதாசன் உள்ளிட்ட ஐயப்ப பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com