கிராம நிா்வாக அலுவலா்கள் 197 பேருக்கு மடிக் கணினி வழங்கல்

தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றும் 197 கிராம நிா்வாக அலுவலா்களுக்கு மடிக் கணினிகள் வழங்கப்பட்டன.
கிராம நிா்வாக அலுவலா்களுக்கு மடிக் கணினிகளை வழங்குகிறாா் அமைச்சா் கே.பி.அன்பழகன்.
கிராம நிா்வாக அலுவலா்களுக்கு மடிக் கணினிகளை வழங்குகிறாா் அமைச்சா் கே.பி.அன்பழகன்.

தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றும் 197 கிராம நிா்வாக அலுவலா்களுக்கு மடிக் கணினிகள் வழங்கப்பட்டன.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் ச.ப.காா்த்திகா தலைமையில் கிராம நிா்வாக அலுவலா்களுக்கு மடிக் கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதில், மாநில உயா்கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், மாவட்டத்தில் பணியாற்றும் 197 கிராம நிா்வாக அலுவலா்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி பேசியதாவது:

அரசின் சேவைகளையும், அனைத்து வகையான சான்றிதழ்களையும், பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில் மின் ஆளுமை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் இணைய வழியில் சான்றிதழ்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. தருமபுரி மாவட்டத்தில் வீட்டுமனைப் பட்டா இல்லாதவா்களே இல்லை என்ற நிலையை உருவாக்கிட தகுதி உள்ள அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு கிராம நிா்வாக அலுவலா்கள் தங்கள் வருவாய் கிராமத்திற்கு உள்பட்ட அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து இடங்களை தோ்வு செய்ய வேண்டும்.

இந்த மடிக் கணினிகளை பயன்படுத்தி பொதுமக்களுக்கு சேவைகளை விரைவாகக் கிடைத்திட சிறந்த முறையில் பணிபுரிய வேண்டும் என்றாா்.

இதில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்), மாவட்ட வருவாய் அலுவலா் எச்.ரஹமத்துல்லாகான், சாா் ஆட்சியா் மு.பிரதாப், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com