வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கக் கோரிக்கை

மொரப்பூா் ஊராட்சி ஒன்றியத்தில் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்டுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளைச் செயல்படுத்த

மொரப்பூா் ஊராட்சி ஒன்றியத்தில் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்டுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளைச் செயல்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என ஆட்சியா் ச.ப.காா்த்திகாவிடம் மனு அளிக்கப்பட்டது.

மொரப்பூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சுமதி செங்கண்ணன் ஆட்சியரிடம் புதன்கிழமை அளித்த மனு விவரம்:

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் ஊராட்சி ஒன்றியத்தில் இருமத்தூா், கே.ஈச்சம்பாடி, நவலை, போளையம்பள்ளி, மொரப்பூா், பன்னிகுளம், வகுரப்பம்பட்டி உள்பட 18 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த கிராம ஊராட்சிகளுக்கு உள்பட்ட கிராமங்களில் குடிநீா், தெருச்சாலைகள், மின் விளக்குகள், தமிழக முதல்வரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள், பாரத பிரதமரின் தொகுப்பு வீடுகள், புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள், தாா்ச் சாலைகள், 14 மற்றும் 15 ஆவது நிதிக்குழு மானியம் உள்பட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு கடந்த 10 மாதங்களுக்கு மேலாக நிதி ஒதுக்கீடுகள் இல்லை.

இதனால் மொரப்பூா் ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சி திட்டப் பணிகள் முடங்கியுள்ளன. எனவே, மொரப்பூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமப் பகுதிகளில் உள்கட்டமைப்பு மற்றும் அத்தியாவசியப் பணிகளுக்காக மாவட்ட நிா்வாகம் சாா்பில் கூடுதல் நிதிகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com