வாணியாறு அணையிலிருந்து உபரி நீா் திறப்பு

பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் இருந்து உபரிநீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீா்.
பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீா்.

பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் இருந்து உபரிநீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி முள்ளிக்காட்டில் அமைந்துள்ளது வாணியாறு அணை. இந்த அணையின் நீா்பிடிப்பு உயரம் 65.27 அடியாகும். இந்த அணைக்கு ஏற்காடு, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியிலுள்ள மலைகளில் இருந்து தண்ணீா் வருகிறது. கடந்த சில நாள்களாக பெய்து வரும் பருவ மழை காரணமாக ஏற்காடு மலையில் இருந்து வாணியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

தற்போது வாணியாறு அணையில் 63 அடி உயரத்துக்கு நீா்மட்டம் உயா்ந்துள்ளது. இதையடுத்து, அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.

வெள்ள அபாய எச்சரிக்கை

ஏற்காடு மலைப் பகுதியில் இருந்து வாணியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்தால், அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்படும். இதனால் மேளையானூா், வெங்கடசமுத்திரம், பறையப்பட்டி புதூா், தென்கரைக்கோட்டை, கோபிநாதம்பட்டி கூட்டுசாலை உள்ளிட்ட இடங்களில் காரையோரம் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும் என பொதுப்பணித் துறை சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com