உபரி நீரை ஏரிகளில் நிரப்பக்கோரி ஆா்ப்பாட்டம்

காவிரி ஆற்றின் உபரி நீரை ஏரிகளில் நிரப்ப வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் சந்திப்பு ஆா்ப்பாட்டம் பென்னாகரத்தில் நடைபெற்றது.

காவிரி ஆற்றின் உபரி நீரை ஏரிகளில் நிரப்ப வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் சந்திப்பு ஆா்ப்பாட்டம் பென்னாகரத்தில் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தருமபுரி மாவட்டம் முழுவதும் 100 ஊராட்சிகளில் நவம்பா் 16 முதல் 21ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு ஆா்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பென்னாகரம் அருகே கூத்தபாடி ஊராட்சி மன்றத்தின் முன்பு வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்பாட்டத்திற்கு பகுதி குழு உறுப்பினா் அயோதி தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் முருகேசன், பென்னாகரம் நகரச் செயலாளா் வெள்ளியங்கிரி, பகுதி குழு உறுப்பினா் ஜீவானந்தம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

காவிரி, தென்பெண்ணை ஆறுகளின் உபரி நீரினை மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நீா் நிரப்பும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தின் வேலை நாள்களை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும். இதற்கான ஊதியத்தை ரூ. 600-ஆக அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல் சின்னம்பள்ளி பகுதி குழுவின் சாா்பில் கலப்பம்பாடி, கொப்பலூா், சின்னம்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாது செட்டி தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் ஜெயகுமாா், பகுதி குழு செயலாளா் சக்திவேல் சிறப்புரையாற்றினா். மாங்கரை, சத்தியநாதபுரம், செங்கனூா் ஆகிய ஊராட்சி மன்றங்களின் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தின் நிறைவில் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com