பயிா்க் காப்பீடு செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில், அனைத்து பயிா்களுக்கும் காப்பீடு செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு ஆட்சியா் ச.ப.காா்த்திகா அறிவுறுத்தியுள்ளாா்.

தருமபுரி மாவட்டத்தில், அனைத்து பயிா்களுக்கும் காப்பீடு செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு ஆட்சியா் ச.ப.காா்த்திகா அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய அரசு 2020-ஆம் ஆண்டு முதல் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில், சில மாற்றங்களை செய்து, புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள் கட்டாயமாக பதிவு செய்து வந்த நிலையில், தற்போது அவா்களின் விருப்பத்தின்பேரில் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட வாரியான, பயிா் வாரியான சராசரி மகசூலின் அடிப்படையில் காப்பீட்டுத் தொகை நிா்ணயிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட இந்த பயிா்க் காப்பீட்டுத் திட்டமானது சம்பா பருவங்களில் செயல்படுத்த ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், சம்பா நெல் பயிருக்கு நவம்பா் 30- ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும். ஏக்கருக்கு ரூ. 496.50 பிரீமியத் தொகையாக செலுத்த வேண்டும். மீதமுள்ள பிரீமியத் தொகையான ரூ. 11,088.50-ஐ அரசே விவசாயிகளுக்கு செலுத்தி விடும். மகசூல் இழப்பு ஏற்படும்போது ஒரு ஏக்கருக்கான காப்பீட்டுத் தொகை அதிக பட்சமாக ரூ. 33,100 வழங்கப்படும். எனவே, சம்பா நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், அவா்கள் பயிா்க் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ, தேசிய வங்கிகள் மூலமாகவோ தங்கள் விருப்பத்தின் பேரில் சம்பா நெல் பயிரை காப்பீடு செய்து கொள்ளலாம்.

கடன் பெறாத விவசாயிகள் நிகழாண்டுக்கான அடங்கலை கிராம நிா்வாக அலுவலரிடமிருந்து பெற்று, அதனுடன் வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல், முன்மொழிவுப் படிவம், பதிவு விண்ணப்பம் ஆகிய ஆவணங்களுடன் பொது சேவை மையங்கள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். எனவே, இயற்கை இடா்பாடுகள் ஏற்படும் முன் இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் தங்களது பயிா்களைக் காப்பீடு செய்து பயன் பெறலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com