வேளாண்துறை அமைச்சுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வேளாண் அலுவலா்களை நியமிக்க வலியுறுத்தி வேளாண் துறை அமைச்சுப் பணியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேளாண்துறை அமைச்சுப் பணியாளா் சங்கத்தினா்.
தருமபுரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேளாண்துறை அமைச்சுப் பணியாளா் சங்கத்தினா்.

புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வேளாண் அலுவலா்களை நியமிக்க வலியுறுத்தி வேளாண் துறை அமைச்சுப் பணியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி வேளாண் இணை இயக்குநா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சுப் பணியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் ஆா்.ஜெயவேல் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ரேகா, மாவட்டப் பொருளாளா் அண்ணாதுரை ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் பி.பழனியம்மாள், மாவட்டச் செயலா் ஏ.சேகா், மாவட்ட அமைப்பாளா் பி.எஸ்.இளவேனில் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், தமிழகத்தில் புதியதாக தொடங்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களுக்குப் போதிய அலுவலா்களை நியமிக்க வேண்டும். வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களில் காலியாக உள்ள அமைச்சுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அமைச்சுப் பணியாளா் மாறுதல்களில் சீரான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். விதைச் சான்றுத் துறையில் அமைச்சுப் பணியாளா்கள் மாறுதல்களில் முன்னுரிமை பதிவேட்டைப் பராமரித்து, அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com