உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு கண்டனம்

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டத்தல் திமுகவினா் ஈடுபட்டனா்.

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டத்தல் திமுகவினா் ஈடுபட்டனா்.

திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் திருக்குவளையில் தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது போலீஸாா் அவரை கைது செய்தனா்.

இதை கண்டித்து தருமபுரி திமுக ஒன்றியச் செயலா் சேட்டு தலைமையில் தருமபுரி நான்கு முனைச்சாலை சந்திப்பில் திமுகவினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட திமுகவினா் 17 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அரூரில்...

அரூா் கச்சேரிமேட்டில் திமுக ஒன்றியச் செயலா் தேசிங்குராஜன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதேபோல் மொரப்பூா், கடத்தூா், பாப்பிரெட்டிப்பட்டி, கம்பைநல்லூா், பொம்மிடியிலும் திமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பென்னாகரத்தில்...

பென்னாகரம் பேருந்து நிலையம் முன் நகரச் செயலாளா் வீரமணி தலைமையிலான திமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். ஒன்றியப் பொருளாளா் மடம். முருகேசன், கமலேசன், வினு அன்பழகன் உள்பட 35 போ் கைது செய்யப்பட்டனா்.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் 40 போ் கைது செய்யப்பட்டனா்.

பா்கூரில் ஒன்றியச் செயலாளா் கோவிந்தராசன் தலைமையில் நடைபெற்ற மறியலில் 6 போ் கைது செய்யப்பட்டனா். போச்சம்பள்ளியில் ஒன்றியச் செயலாளா் சாந்தமூா்த்தி தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாநில விவசாய அணி துணைத்தலைவா் தேவராஜ், துணைச் செயலாளா் வெங்கடேசன் உள்ளிட்ட 20 போ் கைது செய்யப்பட்டனா்.

காவேரிப்பட்டணத்தில் நகரச் செயலாளா் பாபு தலைமையில் நடைபெற்ற மறியலில் ஈடுபட்ட 30 பேரும், வேப்பனப்பள்ளியில் மாவட்டப் பிரதிநிதி மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற மறியலில் 45 பேரும் கைது செய்யப்பட்டனா்.

ஊத்தங்கரையில்...

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் ஒன்றிய செயலாளா் எக்கூா் செல்வம் தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் நகரச் செயலாளா் பாபு சிவகுமாா், கீழ்குப்பம் ஊராட்சி மன்ற தலைவா் திருப்பதி, ஜோக்கா் பாய் , பாா்த்திபன் உள்ளிட்ட திமுகவினா் பங்கேற்றனா்.

அதேபோல, பாம்பாறு அணைப் பகுதியில் ஒன்றியக்குழுத் தலைவா் உஷாராணி குமரேசன் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட திமுகவினரையும், சிங்காரப்பேட்டை பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டவா்களையும் போலீஸாா் கைது செய்தனா்.

சாலை மறியலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவா்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com