பாப்பாரப்பட்டியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்.

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் காவிரி உபரி நீரை ஏரிகளில் நிரப்பிட கோரி பேரூராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் காவிரி உபரி நீரை ஏரிகளில் நிரப்பிட கோரி பேரூராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார குழு உறுப்பினா் ராஜாமணி தலைமை தாங்கினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் அா்ஜுனன் முன்னிலை வகித்து கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தை 200 நாள்களாக அறிவித்து பணி வழங்க வேண்டும். ரூ. 600 ஊதியம் வழங்க வேண்டும். நகரப் பகுதிகளிலும் ஊரக வேலை உறுதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 60 வயது நிரம்பிய அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இலவச வீடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் அனைவருக்கும் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினா்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வேலம்பட்டி, தித்தியோப்பனஅள்ளி, மாதேஅள்ளி ஆகிய ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com