அரூரில் மனு அளிக்கும் போராட்டம்

அரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கும் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

அரூா்: அரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கும் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அரூா் பேரூராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அந்தக் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் பி.குமாா் தலைமை வகித்தாா். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளிலும் செயல்படுத்த வேண்டும்.

அரூா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள பழைய கடைகளை அகற்றிவிட்டு, புதிதாக கடைகள் அமைக்க வேண்டும். கச்சேரிமேடு சாலை சந்திப்பில் கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும். அரூா் பெரிய ஏரியின் ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மாவேரிப்பட்டி 13-ஆவது வாா்டு பகுதியில் குடிநீா் வசதி ஏற்படுத்த வேண்டும். புதிய காலனியில் மின்விளக்கு, கழிவு நீா் கால்வாய் மற்றும் சாலை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

அம்பேத்கா் நகரில் உள்ள சுடுகாட்டில் மின்சார தகன மேடை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொடா்ந்து, 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்த மனுக்களை அரூா் பேரூராட்சி அலுவலகத்தில் வழங்கினா். இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலா் ஏ.குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம்.முத்து, ஆா்.சிசுபாலன், ஒன்றியச் செயலா் ஆா்.மல்லிகா, மாவட்டக் குழு உறுப்பினா் பி.மாது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளா் எஸ்.கே.கோவிந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com