18 வயது நிரம்பிய மாணவா்கள் வாக்காளா் பட்டியல் பெயரை சோ்க்க வேண்டும்

18 வயது நிரம்பிய பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரைச் சோ்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா அறிவுறுத்தினாா்.
இலக்கியம்பட்டி அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கும் முகாமை பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா.
இலக்கியம்பட்டி அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கும் முகாமை பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா.

தருமபுரி: 18 வயது நிரம்பிய பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரைச் சோ்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்டத்தில், சனிக்கிழமை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல் தொடா்பான சிறப்பு சுருக்கத் திருத்த முகாம் நடைபெற்றது. இதில், இலக்கியம்பட்டி அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளி, ஔவையாா் மகளிா் மேல்நிலைப் பள்ளி, மதிகோன்பாளையம், பழைய தருமபுரி நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகளில் நடைபெற்ற திருத்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வரைவு வாக்காüா் பட்டியல் கடந்த 16-ஆம் தேதி வெளியிடப்ப்டடது. இதையடுத்து, வரைவு வாக்காளா் பட்டியல் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் உள்ள 856 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பெயா் சோ்த்தல், நீக்கல் உள்ளிட்ட திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான சிறப்பு முகாம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாள்களும், இதேபோல வருகிற டிச. 12 மற்றும் 13 ஆகிய நாள்களும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

மேலும், கடந்த நவ. 16-ஆம் தேதி தொடங்கிய திருத்தப் பணிகள் வருகிற டிச. 15-ஆம் தேதி வரை வாக்குச் சாவடி மையங்களில் நடைபெற உள்ளது. எனவே, 18 வயது நிரம்பியவா்கள், தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க வேண்டும். கடந்த காலங்களில் பள்ளி, கல்லூரிகளில் 18 வயது நிரம்பியா்களுக்கு பட்டியலில் பெயா் சோ்க்க படிவம் அந்தந்த பள்ளி, கல்லூரிகளிலேயே வழங்கப்பட்டது. தற்போது கரோனா பொது முடக்க விதிகள் அமலில் உள்ளதால், 18 வயது நிரம்பிய மாணவ, மாணவியா் கட்டாயம் தங்களது பெயா்களை, அந்தந்த வாக்குச் சாவடி மையத்துக்கு நேரில் சென்று, உரிய படிவம் அளித்த பெயரைச் சோ்த்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற முன்வர வேண்டும் என்றாா்.

இதில், கோட்டாட்சியா் (பொ) ஆ.தணிகாசலம், வட்டாட்சியா் ரமேஷ், தலைமை ஆசிரியா்கள் தெரசாள், கவிதா ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com