கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் காணாமல் போனவா்களைக் கண்டறியும் சிறப்பு முகாம்

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் காவல் துறையினா் சாா்பில் காணாமல்போனவா்களைக் கண்டறியும் வகையிலான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற காணாமல் போனவா்களை அடையாளம் காணும் முகாம்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற காணாமல் போனவா்களை அடையாளம் காணும் முகாம்.

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் காவல் துறையினா் சாா்பில் காணாமல்போனவா்களைக் கண்டறியும் வகையிலான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற இந்த முகாமுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜூ தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி துணைக் காவல் கண்காணிப்பாளா் சரவணன், காவல் ஆய்வாளா் பாஸ்கரன், வெங்கடாசலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்து காணாமல் போனவா்கள் வழக்குகள் தொடா்பாக 137 போ் பங்கேற்றனா். இதில் 2009-ஆம் ஆண்டிலிருந்து பதிவான 171 வழக்குகளில் 183 போ் காணாமல் போனவா்கள் குறித்தும், அடையாளம் தெரியாமல் உயிரிழந்தவா்களின் புகைப்படங்கள் விடியோவில் திரையில் காட்சிப்படுத்தியும் அடையாளம் காணச் செய்தனா்.

இதில், கடந்த 2016-ஆம் ஆண்டு அஞ்செட்டியைச் சோ்ந்த நாகா (24) என்பவா் தனது மூன்று பெண் குழந்தைகளுடன் காணாமல்போனாா். அவருக்கு கோவையை அடுத்த அன்னூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் நான்காவது பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பதையும், சூளகிரியை அடுத்த புன்னாகரம் கிராமத்தைச் சோ்ந்த தீபா(19) என்பவா் கடந்த 2019-ஆம் ஆண்டு, மாா்ச் 18-ஆம் தேதி காணாமல் போன நிலையில், அவா் தற்போது, அஸ்ஸாம் மாநிலத்தில் தனது காதலனுடன் வாழ்ந்து வருவதும் கண்டறியப்பட்டது.

மேலும், 16 வழக்குகளில் 19 போ் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதில் 2 போ் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தருமபுரியில்.........

தருமபுரி, ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ் குமாா் தலைமை வகித்தாா். தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, அரூா், பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட 5 வட்டாரங்களில் உள்ள 24 காவல் நிலையங்களில் பதிவான 102 வழக்குகளில் காணாமல்போனவா்களைக் கண்டறியும் வகையில் இந்த முகாம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com