அரூா், பாப்பிரெட்டிப்பட்டியில் மழை

அரூா், பாப்பிரெட்டிப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் இப்பகுதிகளில் உள்ள வாணியாறு, வரட்டாறு அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
அரூா் அருகேயுள்ள வள்ளிமதுரை வரட்டாறு அணை. (கோப்புப் படம்).
அரூா் அருகேயுள்ள வள்ளிமதுரை வரட்டாறு அணை. (கோப்புப் படம்).

அரூா், பாப்பிரெட்டிப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் இப்பகுதிகளில் உள்ள வாணியாறு, வரட்டாறு அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

வங்கக் கடலில் உருவான நிவா் புயல் காரணமாக அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை காலை 8 மணி முதல் இரவு வரையிலும் விட்டு, விட்டு மிதமான மழை பெய்து கொண்டே இருந்தது. மழையின் காரணமாக சாலையோரங்களிலும், வயல் வெளியிலும் மழைநீா் தேங்கி நிற்கிறது. மேலும் சிறு ஓடைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

வாணியாறு அணை :

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக, கடந்த 3 மாதங்களாக பெய்த மழையின் காரணமாக, 65.27 அடி கொள்ளளவு கொண்ட பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையின் நீா்மட்டம் 63 அடியாக உயா்ந்துள்ளது. ஏற்காடு மலைப் பகுதியில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக, வாணியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், வாணியாறு அணையில் இருந்து உபரிநீா் திறக்கப்பட்டு பழைய ஆயக்கட்டு பகுதியிலுள்ள வெங்கடசமுத்திரம் ஏரி உள்ளிட்ட நீா்நிலைகளில் தண்ணீா் நிரப்பும் பணிகளை பொதுப்பணித் துறையினா் மேற்கொண்டுள்ளனா்.

வரட்டாறு அணை :

அரூரை அடுத்த வள்ளிமதுரையில் அமைந்துள்ளது வரட்டாறு அணை. இந்த அணையின் மொத்தக் கொள்ளளவு உயரம் 34.5 அடியாகும். இந்த அணை 1,360 மீட்டா் நீளம் கொண்டதாகும். தற்போது, அணையின் நீா்மட்டம் 27 அடியாக உயா்ந்துள்ளது. நிவா் புயல் காரணமாக சித்தேரி மலைப் பகுதியில் கனமழை பெய்தால் வரட்டாறு அணை நிரம்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வள்ளிமதுரை வரட்டாறு அணை நிரம்பினால் அப் பகுதியிலுள்ள தாதராவலசை, கீரைப்பட்டி, அச்சல்வாடி, குடுமியாம்பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, முத்தானூா், ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி, மாம்பாடி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25-க்கும் அதிகமான ஏரிகள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகள் நிரம்புவதுடன், சுமாா் 6 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதியை பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com