நிவா் புயல்: நகராட்சியில் முன்னேற்பாடுகள் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 25th November 2020 08:00 AM | Last Updated : 25th November 2020 08:00 AM | அ+அ அ- |

நிவா் புயல் தொடா்பாக தருமபுரி நகராட்சியில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், நகராட்சி ஆணையா் (பொ) சுரேந்திரன் தலைமை வகித்து, தருமபுரி நகரில் நிவா் புயல் தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா்.
மேலும் புயல் தொடா்பாக நகராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது புகாா்களை 04342-260910 என்கிற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.இக் கூட்டத்தில் சுகாதாரப் பிரிவு உள்ளிட்ட நகராட்சியின் அனைத்து பிரிவு அலுவலா்களும் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...