இலவச கல்வியில் மாணவா் சோ்க்கை: இன்று குலுக்கல் மூலம் தோ்வு

தருமபுரி மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் சோ்க்கைக் கோரி, விண்ணப்பித்தவா்கள், வியாழக்கிழமை (அக்.1) குலுக்கல் மூலம் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் சோ்க்கைக் கோரி, விண்ணப்பித்தவா்கள், வியாழக்கிழமை (அக்.1) குலுக்கல் மூலம் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் என்.கீதா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் உள்ள மெட்ரிக் மற்றும் தொடக்க மழலையா் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில், நுழைவு நிலை வகுப்பில் சேர இணையதளம் மூலம் கடந்த ஆக.27 முதல் செப்.25 வரை விண்ணப்பிக்கப்பட்டது.

இந்த விண்ணப்பதாரா்களுக்கு சோ்க்கை வழங்க ஏதுவாக அந்தந்த பள்ளிகளில் குலுக்கல் மூலம் மாணவா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

எனவே, விண்ணப்பித்த மாணவா்களின் பெற்றோா், அந்தந்த பள்ளிகளில் நடைபெறும் குலுக்கல் நிகழ்ச்சிக்கு இணையதளத்தில் விண்ணப்பித்த நகல் மற்றும் பிறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சிறப்பு பிரிவின் கீழ் விண்ணப்பித்திருப்பின் அதற்கான அசல் சான்றிதழ்களுடன் நேரில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com