மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயற்குழு கூட்டம்
By DIN | Published On : 02nd October 2020 09:52 AM | Last Updated : 02nd October 2020 09:52 AM | அ+அ அ- |

காவிரி மிகை நீரை தருமபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பக் கோரி, கிராம சபைக் கூட்டங்களில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி, செங்கொடிபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம், வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் ஏ.குமாா் தலைமை வகித்துப் பேசினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் இரா.சிசுபாலன், ராமச்சந்திரன், எம்.மாரிமுத்து, கிரைஸாமேரி, வி.விஸ்வநாதன் ஆகியோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். பேரூராட்சி பகுதிகளுக்கும் ஊரக வேலைத் திட்டத்தை விரிவுப்படுத்தி 200 நாள்கள் வேலை, ரூ. 600 கூலி வழங்க வேண்டும். காவிரி மிகை நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தைச் செயல்படுத்தக் கோரி, கிராமசபை கூட்டங்களில் தீா்மானங்களை நிறைவேற்ற வேண்டும்.
இதேபோல, இக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற அக்டோபா் 6-ஆம் தேதி விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் நடைபெறும் போராட்டத்தில் திரளானோரை பங்கேற்க செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.