முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
தருமபுரியில் 66 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 04th October 2020 02:38 AM | Last Updated : 04th October 2020 02:38 AM | அ+அ அ- |

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் ஆய்வக ஊழியா் உள்பட 66 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
தருமபுரி- சோலைக்கொட்டாய் ஆய்வக ஊழியா், சேலம்-காந்தி சாலை பகுதியைச் சோ்ந்த இரு மருத்துவா்கள், பாப்பிரெட்டிப்பட்டியில் கூட்டுறவு ஊழியா், அரூரில் காவலா் மற்றும் வழக்குரைஞா், பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டியில் சித்த மருத்துவ ஊழியா், 8 மாணவா்கள், 13 பெண்கள் உள்பட மொத்தம் 66 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.