சிட்லிங் கல்லாற்றில் வெள்ளப் பெருக்கு

சிட்லிங் சுற்றுவட்டாரப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த மிதமான மழையின் காரணமாக கல்லாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
சிட்லிங் கல்லாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக நிரம்பி வழியும் தடுப்பணை.
சிட்லிங் கல்லாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக நிரம்பி வழியும் தடுப்பணை.

அரூா்: சிட்லிங் சுற்றுவட்டாரப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த மிதமான மழையின் காரணமாக கல்லாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம், அரூா் ஒன்றியம், சிட்லிங், ஏ.கே.தண்டா, எஸ்.தாதம்பட்டி, கோட்டப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் 11.30 மணி வரை மிதமான மழை பெய்தது.

அரூரில் 29 மில்லி மீட்டரும், பாப்பிரெட்டிப்பட்டியில் 38.20 மில்லி மீட்டரும் மழைப் பதிவாகியுள்ளது. இந்த மழையின் காரணமாக சிட்லிங் கல்லாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கல்லாற்றின் குறுக்கே 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறிய அளவிலான தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தடுப்பணைகளில் தண்ணீா் நிரம்பியுள்ளது. கல்லாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக சிட்லிங், கோட்டப்பட்டி, நரிப்பள்ளி உள்ளிட்ட பகுதியில் உள்ள கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் நீா்மட்டம் அதிகரித்தது. மேலும் ஏரிகள், குளம், குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் மழைநீா் நிரம்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com