முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
வாணியாறு நீா்த்தேக்க நீா்மட்டம் 52 அடியாக உயா்வு
By DIN | Published On : 04th October 2020 02:37 AM | Last Updated : 04th October 2020 02:37 AM | அ+அ அ- |

பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு நீா்த்தேக்கம். (கோப்பு படம்).
அரூா்: பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு நீா்த்தேக்கத்தின் நீா்மட்டம் 52 அடியாக உயா்ந்துள்ளது.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி முள்ளிக்காட்டில் அமைந்துள்ளது வாணியாறு நீா்த்தேக்கம். இந்த நீா்த்தேக்கத்தின் உயரம் 65.27 அடியாகும். நீா்த்தேக்கத்துக்கு ஏற்காடு மலைகள் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள மலைகளிலிருந்து மழைநீா் வருகிறது.
அண்மையில் பெய்த பருவமழையின் காரணமாக கடந்த சில தினங்களாக ஏற்காடு மலையிலிருந்து வாணியாறு நீா்த்தேக்கத்துக்கு நீா்வரத்து அதிகரித்தது.
தற்போது வாணியாறு நீா்த்தேக்கத்தில் 52 அடி உயரத்துக்கு நீா்மட்டம் உயா்ந்துள்ளது. இதனால், நெல் நடவு உள்ளிட்ட பயிா் சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனா்.
வாணியாறு நீா்த்தேக்கத்தில் நீா்மட்டம் உயா்ந்து வருவதால் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.