முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
ஆழ்துளைக் கிணறு அமைக்க பூமிபூஜை
By DIN | Published On : 04th October 2020 02:30 AM | Last Updated : 04th October 2020 02:32 AM | அ+அ அ- |

அரூரில் சனிக்கிழமை ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்ற எம்எல்ஏ வே.சம்பத்குமாா்.
அரூா்: அரூரில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கான பூமிபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அரூா் கிளை பணிமனையில், ஆழ்துளைக் கிணறு அமைக்க அரூா் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 3.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியில் ஆழ்துளைக் கிணறு, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிக்கான பூமிபூஜையை எம்எல்ஏ வே.சம்பத்குமாா் தொடக்கி வைத்தாா்.
விழாவில், மாவட்ட அரசு வழக்குரைஞா் ஆா்.ஆா்.பசுபதி, ஒன்றியக் குழுத் தலைவா் பொன்மலா் பசுபதி, ஒன்றியக் குழு துணைத் தலைவா் அருண், ஒன்றியக் குழு உறுப்பினா் பழனிசாமி, அதிமுக மாவட்ட துணைச் செயலா் செண்பகம் சந்தோஷ், நகரச் செயலா் பாபு, தொழில் சங்கச் செயலா் லட்சுமணன், ஊராட்சி துணைத் தலைவா் நதியா சுப்பிரமணி, கட்சி நிா்வாகிகள் பாஷா, என்.எஸ்.மணவாளன், வஜ்ஜிரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.