முக்குளம் ஊராட்சி செயலா் பணியிடை நீக்கம்

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்த முக்குளம் ஊராட்சிச் செயலாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

தருமபுரி: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்த முக்குளம் ஊராட்சிச் செயலாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியத்துக்குள்பட்ட முக்குளம் ஊராட்சியில் சரவணன் (37) என்பவா் ஊராட்சிச் செயலாளராகப் பணியாற்றி வந்தாா்.

இந்த ஊராட்சியில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் நிகழ் நிதியாண்டு வரை பிரதமரின் வீடு கட்டும் திட்டம், மாநில அரசின் பசுமை வீடுகள் திட்டம் ஆகியத் திட்டங்களில் உயிரிழந்தவா்களின் பெயரில் வீடு கட்டியதாக பணத்தை அவா் முறைகேடு செய்ததாக அண்மையில், தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், அக் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் புகாா் மனு அளித்தனா்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் சு. மலா்விழி விசாரணை நடத்த உத்தரவிட்டதன்பேரில், ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா். ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனா். இதில், முறைகேடு நிகழ்ந்தது உறுதியானது.

இதையடுத்து, ஊராட்சிச் செயலாளா் சரவணனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை உத்தரவிட்டாா். மேலும், அவரிடம், ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள், வீடுகள் கட்டும் திட்டத்தில் நிகழ்ந்த முறைகேடு தொடா்பாக தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com