தினமணி செய்தி எதிரொலி: ஒகேனக்கல்லில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பென்னாகரம் அருகே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது குறித்து மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பென்னாகரம் அருகே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது குறித்து மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பென்னாகரம் அருகே ஒகேனக்கல் காவிரி கரையின் மறுபகுதியான மாரு கொட்டாய் பகுதியில் கா்நாடக அரசு பரிசல்களை விட அனுமதி அளித்துள்ளதாகவும், அதேபோல, ஒகேனக்கல் பகுதியிலும் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டுமென தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தினமணி நாளிதழில் கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது குறித்தும், பரிசல் இயக்குவது குறித்தும் தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி ஒகேனக்கல் பகுதியில் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, ஒகேனக்கல்லில் உள்ள பரிசல் ஓட்டிகள், மசாஜ், சமையல் தொழிலாளா்களை அழைத்து அவா்களிடம் ஆட்சியா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அதிக நீா்வரத்தின்போது பிரதான அருவிகள், பரிசல் துறை, நடைபாதை உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்துள்ளதால், அவற்றை சரி செய்து தருமாறு ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஆட்சியா், சேதமடைந்துள்ளவற்றைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிந்தபின் வரும் 16-ஆம் தேதி முதல் ஒகேனக்கல் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.

ஆய்வின்போது, கோட்டாட்சியா் (பொறுப்பு) தணிகாசலம், பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிவண்ணன், ரவிச்சந்திரன், பென்னாகரம் வட்டாட்சியா் சேதுலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகளும் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com