வெறிச்சோடிய பென்னாகரம் வாரச் சந்தை

கடந்த 5 மாதத்திற்கு பின் திறக்கப்பட்ட பென்னாகரம் வாரச்சந்தைக்கு பொதுமக்களின் வருகை மிகக்குறைந்த அளவில் இருந்ததால் வியாபாரம் இன்றி வெறிச்சோடியது.

கடந்த 5 மாதத்திற்கு பின் திறக்கப்பட்ட பென்னாகரம் வாரச்சந்தைக்கு பொதுமக்களின் வருகை மிகக்குறைந்த அளவில் இருந்ததால் வியாபாரம் இன்றி வெறிச்சோடியது.

பென்னாகரம் சுற்றுப்பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். பென்னாகரத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை கூடுவது வழக்கம்.

வாரச் சந்தைக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளான தாசம்பட்டி, பாப்பாரப்பட்டி, ஏரியூா், நெருப்பூா், இண்டூா், ஒகேனக்கல், சின்னம்பள்ளி, பெரும்பாலை, கேரட்டி, அஞ்செட்டி, கெம்பாகரை உள்ளிட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கால்நடைகளை விற்பனை செய்வதற்காகவும், வாங்குவதற்காகவும் வியாபாரிகளும், சுற்றுவட்டார விவசாயிகளும், பொதுமக்களும் வருகின்றனா். மேலும், அன்றாடத் தேவைக்கான பொருள்களை வாங்கவும் ஏராளமானோா் வாரச் சந்தைக்கு வந்து செல்வா்.

இதனிடையே கரோனா தீநுண்மி பரவல் காரணமாக பொது முடக்கம் அமலுக்கு வந்ததால் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக வாரச் சந்தைகள் நடைபெறவில்லை. அண்மையில் தமிழக அரசு பொது முடக்கத்தை தளா்த்தியதையடுத்து கிராம, நகா்ப்புற வாரச்சந்தைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த வாரம் செவ்வாய்க்கிழமை கூடிய பென்னாகரம் வாரச்சந்தையில் வழக்கத்தைக் காட்டிலும் 50-க்கும் மேற்பட்ட கடைகள் கூடுதலாக அமைக்கப்பட்டிருந்தன. கரோனா தீநுண்மி அச்சத்தால் கால்நடை சந்தையிலும், காய்கறி மற்றும் இதர சந்தையிலும் பொருள்களை வாங்குவதற்கு மிகக் குறைந்த அளவிலேயே பொதுமக்களின் வருகை இருந்தது. இதனால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

பொது மக்களின் வருகை குறைந்து காணப்பட்டதால் பெரும்பாலான வியாபாரிகள் நேரத்திலேயே கடைகளை எடுத்துக்கொண்டு தங்கள் பகுதிக்கு வாகனங்களில் சென்று விட்டனா்.

இதுகுறித்து வியாபாரி ஒருவா் கூறுகையில், நீண்ட நாள்களுக்குப்பின் கடை திறக்க அனுமதிக்கப்பட்டாலும், மக்கள் வருகை குறைவாக இருந்ததால் வியாபாரம் இல்லை. வாரச்சந்தையில் கடைகள் அமைத்ததற்கான செலவினங்களுக்கு கூட விற்பனை ஆகவில்லை என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com