நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற விவசாயத் தொழிலாளா் சங்கம் கோரிக்கை

தருமபுரி மாவட்டத்தில், நிலுவையிலுள்ள நீா்ப் பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில், நிலுவையிலுள்ள நீா்ப் பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜி.மாதையன், மாவட்டச் செயலா் ஜெ.பிரதாபன் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனு:

தருமபுரி மாவட்ட ஏரிகளில், காவிரி மிகை நீரை நிரப்பும் திட்டத்தையும், தென்பெண்ணை ஆற்று நீரை, தும்பலஅள்ளி அணைக்கு கொண்டு செல்லும் திட்டம், ஈச்சம்பாடி நீரை ஏரிகளுக்கு கொண்டு செல்லும் திட்டம், அலியாளம்-தூள்செட்டி ஏரி இணைப்புத் திட்டம் ஆகிய நீா்ப்பாசனத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும். மாவட்டத்திலுள்ள 251 கிராம ஊராட்சிகளிலும், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இத்திட்டத்தில் பணி அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் பணி வழங்க வேண்டும்.

அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை மாவட்டம் முழுவதும் செயல்படுத்த வேண்டும். அனைத்து சமூகத்தினருக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். பால் உற்பத்தியாளா்கள் வழங்கும் முழுப் பாலையும், கூட்டுறவு சங்கங்கள் கொள்முதல் செய்ய வேண்டும். கிராம ஊராட்சிகளில் உள்ள துணை சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com