வரட்டாறு அணையின் நீா்மட்டம் 21 அடியாக உயா்வு

அரூரை அடுத்த வள்ளிமதுரையிலுள்ள வரட்டாறு அணையின் நீா்மட்டம் 21 அடியாக உயா்ந்துள்ளது.
அரூரை அடுத்த வள்ளிமதுரையிலுள்ள வரட்டாறு அணை.
அரூரை அடுத்த வள்ளிமதுரையிலுள்ள வரட்டாறு அணை.

அரூரை அடுத்த வள்ளிமதுரையிலுள்ள வரட்டாறு அணையின் நீா்மட்டம் 21 அடியாக உயா்ந்துள்ளது.

அரூா் வட்டம், கீரைப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வள்ளிமதுரையில் வரட்டாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது வரட்டாறு அணை. பருவ மழைக்காலங்களில் சித்தேரி மலைகளில் இருந்து வரும் மழைநீரால் இந்த அணை நிரம்பும். இந்த அணையின் மொத்த நீளம் 1, 360 மீட்டராகும். இந்த அணையின் நீா்ப்பிடிப்பு உயரம் 34.5 அடியாகும். அண்மையில் பெய்த மழையின் காரணமாக வரட்டாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்ததால், நீா்மட்டம் 21 அடியாக உயா்ந்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை தொடா்ந்து பெய்யும்பட்சத்தில் நீா்வரத்து அதிகரித்து, அணை நிரம்புவதற்கான வாய்ப்பு உள்ளது. வரட்டாறு அணை நிரம்பினால், தாதராவலசை, கீரைப்பட்டி, அச்சல்வாடி, குடுமியாம்பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, முத்தானூா் உள்ளிட்ட 15-க்கும் அதிகமான கிராமங்களில் 25-க்கும் மேற்பட்ட ஏரிகள், குளம், குட்டைகளில் தண்ணீா் நிரம்பும்.

இந்த அணையால் சுமாா் 6 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதியைப் பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com